டாமான்சாரா, ஆகஸ்ட்-10 – தொழில்முனைவர்-கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சு, PERNAS வாயிலாக சிலாங்கூர் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த 300 மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகளை வழங்கியுள்ளது.
சுங்கை பூலோ வட்டாரத்தில் மூக்குக் கண்ணாடி உதவித் தேவைப்படும் மாணவர்களை அடையாளம் கண்டு, Focus Point நிறுவனத்தின் ஒத்துழைப்போடு அந்த CSR அதாவது பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிறைவேற்றப்பட்டது.
அந்த 300 மாணவர்களும் ரஹ்மான் புத்ரா தேசிய இடைநிலைப்பள்ளி, புக்கிட் டாரா தமிழ்ப்பள்ளி, சுபாங் சீனப்பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் என துணையமைச்சரும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மூக்குக்கண்ணாடி அன்பளிப்பும், இலவச கண் பரிசோதனையும் PERNAS மற்றும் Focus Point நிறுவனத்தின் கூட்டு முயற்சியாகும்.
தனது CSR நடவடிக்கையாக PERNAS இவ்வாண்டு இதுவரையில் மட்டுமே மடானி கிராம தத்தெடுப்புத் திட்டம், பள்ளி மாணவர்களுக்கான உதவிகள், ஊடகவியலாளர்களுக்கான ரொக்க உதவிகள் போன்றவற்றை மேற்கொண்டுள்ளது.
அதே சமயம், Focus Point நிறுவனம், பத்தாயிரம் மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை, உதவொத் தேவைப்படும் 830 பேருக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கியது உள்ளிட்ட 18 CSR நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.