சிப்பாங், பிப் 22 – Cyberjaya வில் Cyber valley யில் கார் நிறுத்தம் பகுதியில் மூன்று மரங்கள் விழுந்ததில் 12 வாகனங்கள் சேதம் அடைந்தன. சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் சிப்பாங் நகரான்மைக் கழகத்தின் மீட்புக்குழுவினர் விழுந்த மரங்களை வெட்டி அதனை அப்புறப்படுத்தினர்.
12.2 மீட்டர் உயரம் கொண்ட மூன்று மரங்கள் விழுந்ததில் வாகனங்கள் மட்டுமே சேதம் அடைந்தன. அந்த சம்பவத்தில் பொதுமக்களில் எவரும் காயம் அடையவில்லையென சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவின் இயக்குனர் Norazam Khamis விவரித்தார்.