
கோலாலம்பூர், ஜன 16 – அம்னோவின் தலைவராக இருக்கும்வரை அக்கட்சிக்கு அகமட் ஸாஹிட் ஹமிடி சுமைத்தான் என கூறியிருந்த பினாங்கு துணை முதலமைச்சர் ராமசாமியை அம்னோவின் தலைவர்களில் ஒருவரான Puad Zarkashi சாடினார். ராமசாமிகூட DAP கட்சிக்கு சுமையாக இருக்கிறார் என்பதை அவர் மறந்துவிட்டார் என அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான புவாட் தெரிவித்தார். அதனால்தான் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென புத்ராஜெயா DAP கோரிக்கை விடுத்திருப்பதாக தமது முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் புவாட் தெரிவித்திருக்கிறார்.
இன உணர்வுகளை எழுப்பிவரும் பினாங்கு DAP யின் துணைத் தலைவருமான ராமசாமிக்கு DAP யின் மத்திய செயலவை ஆலோசனை வழங்கும்படி புவாட் வலியுறுத்தினார். அம்னோவின் தலைவராக இருக்கும்வரை அக்கட்சிக்கும் ஒற்றுமை அரசாங்கத்திற்கும் அவர் சுமையாகத்தான் இருப்பார் என ராமசாமி கூறியிருந்தது தொடர்பாக புவாட் கருத்துரைத்துரைத்தபோது இதனை தெரிவித்தார்.