
ஒற்றுமை அரசாங்கத்தில் இணைவதற்கு முன், பகைமை பாராட்டிய காலத்தில், அம்னோவுக்கு எதிராக முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும், DAP உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டுமென, அம்னோ இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
அம்னோ உறுப்பினர்களின் மனதை நெகிழ வைக்க வேண்டும் என்றால், குறிப்பாக எதிர்வரும் தேர்தலுக்கு முன்னதாக, DAP கட்டாயம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென, அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் முஹமட் அக்மால் சாலே தெரிவித்தார்.
அதே சமயம், ஒற்றுமை அரசாங்க நிர்வாகத்தில், இனவாத போக்கை DAP கொண்டிருக்கவில்லை என்பதையும் அது நிரூபிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
தலைநகர், புத்ரா உலக வாணிப மையத்தில், கொள்கை உரையை ஆற்றிய போது, அவர் இவ்வாறு கூறினார்.