அம்பாங் ஜெயா, ஆகஸ்ட்-26 – துணை தேட உதவும் dating app செயலியில் அறிமுகமான மாற்றுத்திறனாளி பெண்ணைக் கற்பழித்த புகாரின் பேரில், அம்பாங் ஜெயாவில் ஓர் ஆடவன் கைதாகியுள்ளான்.
ஆகஸ்ட் 17-ஆம் தேதி தாமான் சாகாவில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக, அப்பெண்ணின் 36 வயது தாய் போலீசில் புகார் செய்தார்.
வீட்டில் CCTV கேமரா திடீரென வேலை செய்யாமல் போனது குறித்து 16 வயது மகளிடம் கேட்ட போது, உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
சந்தேக நபர் வீட்டுக்கு வந்து, கட்டாயப்படுத்தி தன்னுடன் உறவு கொண்டதாக, அறிவுசார் இயலாமையுடைய (intellectual disability) அப்பெண் தன் தாயிடம் ஒப்புக் கொண்டார்.
உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீஸ், ஆகஸ்ட் 21-ஆம் தேதி சுபாங்கில் உள்ள வீட்டில் வைத்து 24 வயது ஆடவனைக் கைதுச் செய்தது.
கற்பழிப்புக் குற்றத்திற்காக குற்றவியல் சட்டத்தின் 376-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக, அந்நபரின் ஐந்து நாள் தடுப்புக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.