
கோலாலம்பூர், ஏப் 4 – DBKL எனப்படும் கோலாலம்பூர் மாநாகர் மன்ற அமலாக்க அதிகாரிகளின் சீருடையில் உடல் கேமராக்களின் பயன்பாடு விரிவுபடுத்தப்படும். அமலாக்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வைரலான குழப்பமான சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கோலாலம்பூர் மாநாகர் மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் லாய் சென் ஹெங் ( Lai CHen Heng ) தெரிவித்தார்.
மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகளிடையே முன்பு வைரலாகிய குழப்பமான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை தடுக்கும் நடவடிக்கையாக இது அமைவதாக அவர் கூறினார்.
தற்போது அமலாக்க அதிகாரிகளிடையே உடல் கேமராக்களின் பயன்பாடு ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது.
கேமராக்களின் பயன்பாடு தற்போது உரிமம் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்தல் அல்லது சோதனை செய்தல் போன்ற பெரிய அளவிலான நடவடிக்கைகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. உடல் கேமராக்களின் பயன்பாட்டை விரிவுபடுத்துவது தொடர்பான ஆலோசனை விரைவில் முன்மொழியப்படும். அதே வேளையில் அதற்கான செலவு மற்றும் தரவு சேமிப்பு அமைப்பு உட்பட பல விவகாரங்களை ஆராய வேண்டும் என லாய் சென் ஹெங் தெரிவித்தார்.
எங்களிடம் ஆயிரக்கணக்கான சட்ட அமலாக்கப் பணியாளர்கள் உள்ளனர். கேமராக்களின் விலையைத் தவிர, ஒவ்வொரு நாளும் பெறப்பட்ட தரவு எவ்வாறு சேமிக்கப்படும் என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே தரவுகளை சேமிப்பு விவகாரத்திலும் முதலீடு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
கடந்த வாரம், ஜாலான் Tuanku Abdul Rahman னைச் சுற்றியுள்ள அமைதியான சூழ்நிலையானது, தனிநபர்கள் மற்றும் DBKL அமலாக்க அதிகாரிகளின் பல குழுக்களை உள்ளடக்கிய ஒரு சலசலப்பால் பிரச்னையாக உருவெடுத்தது. சம்பந்தப்பட்ட இடத்தில் உரிமம் இல்லாமல் வணிகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக DBKL இன் அமலாக்க நடவடிக்கைகளின் காரணமாக நடைபெற்ற இச்சம்பவம் சமூக வலைத்தலங்களில் வைரலானது