ஈப்போ, ஆகஸ்ட் 26 – கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் பொறுப்பற்ற நடவடிக்கையால் இந்திய மாது சாலையில் ஏற்பட்ட குழியில் விழுந்த நிலையில், அவர் உயிரோடு இருக்கிறாரா அல்லது இல்லையா என்பது தெரியாமல் இருப்பது வருத்தமாக இருப்பதாக கூறியுள்ளார் ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் வின்சன் டேவிட்.
தாயின்றி தவிக்கும் மகன், மனைவியின்றி தவிக்கும் கணவர் என்ற நிலைப்பாடு அக்குடும்பத்திற்கு உருவாகி விட்டது.
அந்த குடும்பத்திற்குக் கோலாலம்பூர் மாநகர் மன்றம் என்ன கைமாறு செய்யப் போகிறது என்று தம் கருத்தை அவர் முன் வைத்தார்.
இதுவரை பொதுமக்களுக்கு அதாவது நடைபயணிகளுக்குப் பாதுகாப்பு குறித்து எத்தகைய திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன என்ற தகவலை வெளியிட முடியுமா?’, என்ற கேள்விகளும் மக்களிடமிருந்து மேயரை நோக்கி எழுந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகவே, இவ்விவகாரத்திற்கு முறையான, நம்பகத்தன்மையான அறிக்கை ஒன்றைக் கோலாலம்பூர் மேயர் வெளியிடுவது அவசியமாகும்.
பாதிக்கப்பட்டவர் யார் என்பது முக்கியமல்ல இங்கே மனிதநேய அடிப்படையில் அந்த மாதுவிற்கும் அக்குடும்பத்திற்கும் நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும் அவர் வலியுறுத்தினார்.