கோலாலம்பூர், ஜூன்-29 – கோலாலம்பூர் மாநகர மன்றம் (DBKL) வரும் ஜூலை முதல் தேதி தொடங்கி புதிய அபராத விகிதத்தை அமுல்படுத்துகிறது.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் வரும் போக்குவரத்துக் குற்றங்கள் மற்றும் அதன் அனைத்துத் துணை விதிகளின் கீழ் வரும் குற்றங்களையும் அது உள்ளடக்கியிருக்கும்.
அவ்வகையில் மோட்டார் சைக்கிள்களுக்கான சம்மன் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களுக்குள் அபராதத் தொகையைச் செலுத்தினால் 30 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படும்.
அதுவே 16-ரிலிருந்து 30 நாட்கள் வரை சென்றால், 50 ரிங்கிட்டும், 31-ரில் இருந்து 60 நாட்கள் வரை தள்ளிப் போனால் 80 ரிங்கிட்டும் அபராதமாக விதிக்கப்படும்.
கார்களுக்கான அபராதத் தொகையும் மேற்கண்ட அதே காலக்கட்டத்திற்கு முறையே 50 ரிங்கிட், 80 ரிங்கிட், 100 ரிங்கிட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனங்களுக்கு, முதல் 15 நாட்களுக்கு 200 ரிங்கிட்டும், 16-ரிலிருந்து 30 நாட்கள் வரை 250 ரிங்கிட்டும், 31-ரிலிருந்து 60 நாட்கள் வரைப் போனால் 300 ரிங்கிட்டும் அபராதமாக விதிக்கப்படும்.