கோலாலம்பூர் , டிச 19 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது பரபரப்பான அலுவல் பணிகளுக்கிடையே நேற்றிரவு தனது பேரப்பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட்டார். டேவான் பகாசா டான் புஸ்தகாவில் நடந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து தலைநகரில் உள்ள ஒரு உணவகத்தில் தனது நேரத்தை செலவழித்த பல புகைப்படங்களை அன்வார் முகநூலில் பகிர்ந்துள்ளார். DBP நிகழ்வுக்குப் பின் வீட்டிற்கு செல்வதற்கு முன் பசித்திருந்த என் பேரக்குழந்தைகளை மகிழ்வித்தேன் என அவர் பதிவிட்டுள்ளார். ‘பாப்பராக்’ டத்தோ ராம்லி சரிப்பின் Nyanyian Serambi பாடலின் வரிகளையும் அவர் நினைவு கூர்ந்தார். காலையில், மாலையில், சில சமயங்களில் இரவு தாமதமாக, பிரியமானவர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக சம்பாதிப்பது என்ற மொழிபெயர்ப்பை அந்த பாடல் வரிகள் கொண்டுள்ளது. .
Ramli மற்றும் Asmidar, தேசிய இலக்கியவாதி Datuk Anwar Ridhwan போன்ற பழம்பெரும் கலைஞர்கள் பங்கேற்ற Malam Manifestasi Tiga Seni நிகழ்வில அன்வார் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வின் போது, DBP இயக்குநர்கள் குழுவின் தலைவரான டத்தோ Anwar Ridhwan வழங்கப்பட்ட Air yang ku Minum என்ற சிறப்புக் கவிதை அன்வாருக்கு அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. தேசிய கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய அகாடமியின் (அஸ்வரா) நுண்கலை பீடத்தின் Suzlee Ibrahim அவர்களால் நேரடி ஓவியமும் அன்வாருக்கு வழங்கப்பட்டது