Latestமலேசியா

Delta வைரஸை ஆக்கப்பூர்வமாக எதிர்க்கும் ஆற்றல் Sinovac கிற்கு உண்டு

கோலாலம்பூர், ஜூலை 23 – Delta வைரஸை எதிர்க்கும் ஆற்றல் Sinovac தடுப்பூசிக்கு இருப்பதாக அந்த தடுப்பூசியை தயாரிக்கும் Sinovac Biotech Ltd நிறுவனம் கூறியுள்ளது. இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு Sinovac தடுப்பூசி நல்ல பலனை அளித்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரேசில், இந்தோனேசியா, சிலி, மற்றும் துருக்கியில் Sinovac பயன்படுத்தப்பட்டதோடு நல்ல விளைவை தந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடுமையான தொற்று மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களுக்கும்கூட Shinovac ஆக்கப்பூர்வமான பலனைத் தந்துள்ளது என Sinovac Biotech நிறுவத்தின் பேச்சாளரான Liu Peicheng கூறினார். பெய்ஜிங்கில் தலைமையகத்தைக் கொண்ட Sinovac Biotech Ltd நிறுவனத்தை சேர்ந்த Liu Peicheng பெர்னாமா எழுப்பிய கேள்விக்கு தெரிவித்த பதிலில் இதனை தெரிவித்தார். உலகின் பல நாடுகளில் Sinovac தடுப்பூசி மருந்து பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதிக வீரியம் மற்றும் விரைவாக பரவக்கூடிய ஆற்றலைக் கொண்ட Delta வைரஸை தடுப்பதில் அதன் ஆற்றல் எந்த எந்த வகையில் இருக்கிறது என்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!