
பத்து பஹாட், ஏப் 9- DLP எனப்படும் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை முதல் வகுப்பில் ஆங்கிலத்தில் போதிக்கும் விவகாரத்தில் இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு கல்விஅமைச்சு முயற்சிக்கும். ஜோகூரிலுள்ள Yahya Awal தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த பெற்றோர்கள் DLP வகுப்புகள் கட்டாயம் வேண்டுமென்று அண்மையில் மறியலை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பில் தீர்வு காண்பதற்கான முயற்சியில் கல்வி அமைச்சு ஈடுபடும் என கல்வித்துறையின் துணையமைச்சர் Lim Hui Ying தெரிவித்திருக்கிறார். சிறந்த தீர்வு ஒன்றை காண்பதற்காக சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கும் மாநில கல்வித்துறைக்குமிடையே தற்போது பேச்சு நடைபெற்று வருகிறது. இரண்டு தரப்புக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கான நாங்கள் தொடர்ந்து பேச்சுக்களை தொடர்வோம் என Lim Hui Ying கூறினார்.