கோலாலம்பூர், நவம்பர்-15 – மருத்துவமனையின் கார் நிறுத்துமிடத்தில் double parking செய்ததால் தனது கார் கண்ணாடியை உடைத்த நபரை கண்டுபிடிக்க சமூக வலைத்தளவாசிகளின் உதவியை நாடியப் பெண்ணுக்கு, ஏச்சும் பேச்சுமே பதிலாக கிடைத்துள்ளது.
கார் கண்ணாடி உடைக்கப்பட்ட புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றியப் அப்பெண், அதற்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிக்க உதவுமாறு இணையவாசிகளைக் கேட்டுக் கொண்டார்.
காஜாங் மருத்துவமனயில் நவம்பர் 11-ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு double parking செய்திருந்ததை ஒப்புக் கொண்டவர், தன் கார் கண்ணாடியை உடைத்தவரை யாராவது பார்த்திருந்தாலோ, அல்லது dashcam வீடியோ பதிவை வைத்திருந்தாலோ கொடுத்துதவுமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால், அவர் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை; அப்பெண் மீது அனுதாபப்படுவதற்கு பதிலாக வலைத்தளவாசிகள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
Double-parking செய்து உங்கள் பக்கம் தவறை வைத்துக் கொண்டு, கண்ணாடி உடைத்தவரைத் தேடினால் எப்படி? என கருத்துகள் குவிகின்றன.
அப்படியே double-parking செய்திருந்தாலும், கைப்பேசி எண்ணையாவது காரில் எழுதி வைத்து விட்டு சென்றிருக்கலாமே என ஒருவர் கேட்க, கைப்பேசி எண் எழுதி வைக்கப்பட்டிருந்ததாகவும் ஆனால் அழைத்தால் எடுக்கவில்லை என்றும் மற்றொருவர் பதிவிட்டிருந்தார்.
மற்றவர் மீது பழிபோடுவதை விடுங்கள்; உங்கள் செயலுக்கு நீங்களே வாரிசு என இன்னொரு வலைத்தளவாசி கருத்து தெரிவித்துள்ளார்.