கோலாலம்பூர், ஏப்ரல்-15, காதலியுடன் பயணித்த ஆடம்பர மின்சாரக் கார் விபத்துக்குள்ளாகி பதின்ம வயது இளைஞன் மரணமடைந்துள்ளான்.
அச்சம்பவம் DUKE நெடுஞ்சாலையின் 6.6-வது கிலோ மீட்டரில் வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்தது.
19 வயது அவ்விளைஞன் ஓட்டியக் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியதாக கோலாலம்பூர் போக்குவரத்து அமுலாக்க மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குனர் Asisten Komisioner Sarifudin Mohd Salleh தெரிவித்தார்.
மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்ததில், காரோட்டியான அவ்விளைஞன் கடும் தீப்புண் காயங்களுக்கு ஆளாகி, இடுப்பு முறிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரின் 19 வயது காதலி, இடுப்பு எலும்பு முறிவுக்கு ஆளாகி சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவ்விபத்து 1987-ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.