பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 12 – Taman Setiawangsa அருகே DUKE நெடுஞ்சாலையில் BMW 17 கார் தடம்புரண்டு தீப்பற்றி எரிந்ததில், காரோட்டி என நம்பப்படும் 19 வயது இளைஞர் உயிரிழந்தார்.
உடனிருந்த தோழி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் அவ்விபத்து நிகழ்ந்திருக்கிறது.
சம்பவத்தை நேரில் பார்த்த வழிப்போக்கர்கள் தீயணைப்பு மீட்புத் துறைக்குத் தகவல் தெரிவித்ததோடு, காயமடைந்த இருவரையும் எரிந்துக் கொண்டிருந்த காரின் இடிபாடுகளில் இருந்து வெளியே இழுத்திருக்கின்றனர்.
எனினும், அங்கு வந்துச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் அவ்விளைஞன் மரணமடைந்து விட்டதை உறுதிச் செய்தனர்.
அந்த BMW கார் தீயில் முழுவதுமாக எரிந்துப் போனதாக தீயணைப்புத் துறை பேச்சாளர் சொன்னார்.
கார் தீப்பற்றியதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.