
ஜோகூர் பஹரு , ஜன 20 – மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான e-gate மின்னியல் நுழைவாயில் சேவை இன்று தொடங்கி சிங்கப்பூர் நாட்டவர்களுக்கும் திறக்கப்படுகிறது.
இதற்கு முன் மலேசியர்கள் மட்டுமெ அச்சேவையை பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட வேளை ; இன்று தொடங்கி சிங்கப்பூர் நாட்டவர்களுக்கும் அது திறக்கப்படுவதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நாசுதியோன் தெரிவித்தார்.
அதன் வாயிலாக, மலேசியாவுக்கு வந்து போகும் 30 ஆயிரம் முதல் ஐம்பதாயிரம் சிங்கப்பூர் நாட்டவர்கள் பயனடைவார்கள் என்பதோடு, நுழைவாயிலில் நெரிசலை தவிர்க்கும் குறுகிய கால திட்டமாகவும் அது கருதப்படுகிறது.
எனினும், அச்சேவையை பயன்படுத்த, சிங்கப்பூர் நாட்டவர்களின் கடப்பிதழ் காலாவதியாக குறைந்தது மூன்று மாதங்களுக்கு மேல் இருக்க வேண்டும் என்பதோடு, மேலும் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.