Latestஇந்தியா

சீனாவுக்காக உளவு பார்த்ததாக இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட புறா; 8 மாதங்களுக்கு பின்னர் விடுவிப்பு

மும்பை, பிப்ரவரி 2 – சீனாவுக்காக உளவு பார்த்த சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த புறா ஒன்று எட்டு மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு மே மாதம், மும்பை, செம்பூர் புறநகர் பகுதியிலுள்ள, பிர் பாவ் படகுத்துறையில் அந்த புறா பிடிபட்டது.

கடந்த எட்டு மாதங்களாக, கால்நடைகளுக்கான பாய் சகர்பாய் டின்ஷா பெட்டிட் மருத்துவமனையில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த அந்த புறாவை விடுவிக்க, கடந்த திங்கட்கிழமை மருத்துவமனை நிர்வாகம் அனுமதி கோரியிருந்தது.

அதனை தொடர்ந்து, செவ்வாய்கிழமை அப்புறா விடுவிக்கப்பட்டது.

பிடிபட்ட போது, அந்த புறாவின் கால்களில் இரு மோதிரங்களும், அதன் இரு இறக்கைக்கு அடியிலும் சீன எழுத்துகளை கொண்ட காகிதம் ஒன்றும் இருந்தன.

அதனால், சீன உளவாளி என சந்தேகிக்கப்பட்ட அந்த புறா பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனையில் சிறைபிடிக்கப்பட்டது.

எனினும், அது தைவானை சேர்ந்த பந்தய புறா எனவும், அங்கு நடைபெற்ற பந்தயம் ஒன்றின் போது அது வழிதவறி இந்தியாவுக்கு வந்தது எனவும் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அப்புறாவுக்கு எதிரான உளவு குற்றச்சாட்டு தள்ளுப்படி செய்யப்பட்டு அது விடுதலை செய்யப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!