
கியுட்டோ , மார்ச் 28 – தென் அமெரிக்க நாடான Ecuador-ரில் ஏற்பட்ட நிலச்சரிவில் எழுவர் மரணம் அடைந்த வேளையில் சுமார் 50 பேர் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் பல மாதங்களாக தொடர்ந்து கடுமையாக மழை பெய்து வருவதைத் தொடர்ந்து அங்கு அடிக்கடி நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பேரிடர் ஏற்பட்டு வருகின்றன. தலைநகர் கியுட்டோவின் தெற்கே 300 கிலோமீட்டர் தொலைவில் ஒரு கிராமத்திலுள்ள 12 க்கும் மேற்பட்ட வீடுகள் புதையுண்டதில் 21 பேர் காயம் அடைந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.