
கோலாலம்பூர், மே 7 – இப்போதைய EL Nino வறட்சிக் காலத்தின் பாதிப்பை சமாளிப்பதற்கான செயல் திட்டத்திற்கான நடவடிக்கையை எடுக்கும்படி அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த நீர் நிர்வாகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
வறட்சியினால் ஏற்படும் நீர் பற்றாக்குறை விவகாரத்திற்கு எப்படி தீர்வு காண்பது மற்றும் அந்த நெருக்கடியை சமாளிப்பதற்கான வழிவகைகளைக் கொண்ட திட்டத்தை வரையும்படி தேசிய நீர் சேவைகள் ஆணையத்தின் தலைவர் Charles Santiago கேட்டுக்கொண்டார்.
அதோடு நீர் விநியோக சாத்தியம் குறித்த நெருக்கடி குறித்தும் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடப்பாட்டையும் நீர் நிர்வாகத்தை கையாளும் தரப்பினர் கொண்டிருக்க வேண்டும்.
கூடுதல் நீர் வளங்களை கொண்டிருக்கும் மாநிலங்கள் குறைவான நீர் விநியோகிப்பு பிரச்சனையை எதிர்நோக்கும் மாநிலங்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் Charles Santiago வலியுறுத்தினார்.