Latestமலேசியா

Elmina விமான விபத்தில் மரணம் அடைந்த 10 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டது

கிள்ளான், ஆக 21 – ஷா அலாமில் ,Elimina வில் விமான விபத்தில் உயிரிழந்த 10 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ Hussein Omar Khan தெரிவித்திருக்கிறார். அனைத்து 10 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டு விட்டன. அவர்களில் ஒருவரின் உடல் அவரது குடும்பத்தாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. எஞ்சிய 9 சடலங்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் இன்று 9 மணியிலிருந்து கட்டம் கட்டமாக ஒப்படைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இன்று காலையில் கிள்ளான் Tengku Ampuan Rahimah மருத்துவமனையின் சவக்கிடங்கில் செய்தியாளர்களிடம் பேசியேபோது Hussein தெரிவித்தார்.

கை ரேகை உட்பட பல்வேறு உடற்கூறு தொழிற்நுட்பங்கள் மூலம் மரணம் அடைந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறினார். இதனிடையே வியாழக்கிழைமை நிகழ்ந்த அந்த விமான விபத்து குறித்து விசாரணை நடத்திவரும் போலீசார் பல்வேறு Dashcam உரிமையாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்திருப்பதாக உசேய்ன் கூறினார். அந்த விமானத்தில் இருந்த 8 பேருடன் சாலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற ஆடவர் மற்றும் வாடகை கார் ஓட்டுனரும் மாண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!