Latestமலேசியா

Endemic கட்டத்திற்குள் நுழையும் முடிவை கவனமுடன் எடுக்க வேண்டும் ; பேரரசர் வலியுறுத்து

கோலாலம்பூர், பிப் 28 – கோவிட் தொற்றுடன் மக்கள் வாழப் பழகிக் கொள்வதற்கான endemic கால கட்டத்திற்குள் மலேசியா நுழைவதற்கான முடிவை மிக கவனமுடன் எடுக்க வேண்டுமென, பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா கூறியுள்ளார்.

கோவிட் -19 மீட்சிக்கான Nikkei Asia குறியீட்டில் 122 நாடுகளின் வரிசையில் மலேசியா 13-வது இடத்தில் உள்ளது. பெரியவர்களில் 98 விழுக்காட்டினர் கோவிட் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்நிலையில், புதிய வகை கோவிட் வைரசிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மலேசியர்கள் பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளும்படி பேரரசர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, ஆளும் – எதிர்கட்சிகளுக்கு இடையிலான கருத்திணக்க உடன்பாட்டினால் நாட்டில் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட்டிருப்பதை தம்மால் காண முடிந்திருப்பதாக பேரரசர் குறிப்பிட்டார். எனினும், அந்த அரசியல் நிலைத்தன்மை தொடர்ந்து நிலைத்திருப்பதை நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் உறுதிப்படுத்த வேண்டுமென்றாரவர்.

மேலும், இரவு –பகல் என தொடர்ந்து அரசியல் செய்வதை விடுத்து மக்களின் நலனைக் காப்பதிலும், பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை முன்னெடுப்பதிலும் அரசியல்வாதிகள் கவனம் செலுத்தும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

14 –வது நாடாளுமன்றத்தின் ஐந்தாம் தவணைக்கான கூட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர், பேரரசர் அல் சுல்தான் நாட்டு மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இந்த அறிவுறுத்தலை முன் வைத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!