
லண்டன் , ஜன 31 -Benfica-வின் மத்திய திடல் ஆட்டக்காரரான Enzo Fernandez-சின் சேவையை பெறுவதில் செல்சி தீவிரம் காட்டி வருகிறது.
அதற்காக, வளர்ந்து வரும் அந்த அர்ஜெண்டினா நட்சத்திரத்தின் பரிமாற்ற விதியை மீட்டெடுப்பதற்கான, பத்து கோடியே ஐம்பது லட்சம் யூரோ ஒப்பந்ததுக்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கியுள்ளது செல்சி.
எனினும், செல்சி அணியின் அந்த பத்து கோடியே ஐம்பது லட்சம் யூரோ ஒப்பந்தத்தை Benfica நிராகரித்ததாக கூறப்படுகிறது.
Enzo Fernandez-சை பெற பல தரப்புகள் விரும்புகின்றன. எனினும், அவரது ஒப்பந்ததில் இருக்கும் பரிமாற்ற விதிக்கான தொகையை செலுத்தினால் மட்டுமே அந்த எண்ணம் ஈடேறும். அதனால், இம்மாத தொடக்கத்தில் Enzo Fernandez-சை பெறும் முயற்சியில் தோல்விக் கண்ட செல்சியை Benfica உரிமையாளர் Roger Schmidt சாடியிருந்தார்.
Benfica-வின் பரிமாற்ற விதிகளை உண்மையில் செல்சி நிறைவேற்றினால், உலகில் மிக அதிக தொகையில் அணிமாறிய விளையாட்டாளராக Enzo Fernandez திகழ்வார்.