Latestமலேசியா

EPF மூன்றாவது கணக்கில் இருந்து 250 ரிங்கிட்டுக்கும் மேல் மீட்க விரும்பினால் e-KYC Verification முறை கட்டாயமாகும்

கோலாலம்பூர், மே-13, ஊழியர் சேமநிதி வாரியம் EPF -ஃபின் புதிய மூன்றாவது கணக்கான Akaun Flesibel-லில் பாக்கி தொகையைப் பொருத்து, நினைத்த நேரத்தில் குறைந்தது 50 ரிங்கிட்டை சந்தாத்தாரர்கள் மீட்க முடியும்.

அப்படி சந்தாத்தாரர்கள் மீட்கும் தொகை, அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் போடப்படும் என EPF அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

மூன்றாவது கணக்கில் இருந்து 250 ரிங்கிட்டுக்கும் மேல் மீட்க விரும்பும் சந்தாத்தாரர்கள், முதலில் e-KYC verification சரிபார்ப்பு முறையை கடக்க வேண்டும் என்பதும் கட்டாயமாகும்.

e-KYC அல்லது ‘electronic – Know Your Customer’ என்பது EPF i-Akaun பயன்பாட்டில் உள்ள முக அங்கீகார தொழில்நுட்பத்தின் மூலம் மின்னணு அடையாள சரிபார்ப்பு செயல்முறையாகும்.

எப்படி இருந்தாலும், 30 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேற்போகாத பணத்தை மீட்பதற்காக சந்தாத்தாரர்கள் EPF அலுவலகங்களுக்குப் படையெடுக்க வேண்டியதில்லை.

அவர்களின் முந்தையப் பதிவுகள் அடிப்படையில் இணையம் வாயிலாகவே அடையாளத்தைச் சரிபார்த்து உறுதிச் செய்துக் கொள்ள முடியும் என EPF விளக்கியது.

55 வயதுக்குக் கீழ்பட்ட EPF சந்தாத்தாரர்களின் கணக்குகள் மறுசீரமைக்கப்பட்டு, தேவைப்படும் போதெல்லாம் பணத்தை மீட்கும் வசதியைக் கொண்ட மூன்றாவது கணக்கு அண்மையில் அறிமுகம் கண்டது.

தொடக்கக் கட்டமாக Akaun Sejahtera எனப்படும் இரண்டாவது கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகையை Akaun Fleksibel எனும் மூன்றாவது கணக்கிற்கு மாற்றவும் விருப்ப அடிப்படையில் சந்தாத்தாரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மே 11 முதல் ஆகஸ்ட் 31 வரை, ஒரே ஒரு முறை மட்டுமே அவ்வாய்ப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!