
கோலாலம்பூர், ஜன 27 – குழுவாக பயணிப்பவர்களுக்கு 25 விழுக்காடு கட்டண கழிவை அறிவித்திருக்கிறது KTMB நிறுவனம்.
Travel Sama – Sama இயக்கத்தின் கீழ், இந்த கட்டணச் சலுகை ஜனவரி 27-ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 31-ஆம் தேதி வரையில் வழங்கப்படுமென KTMB குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Datuk Mohd Rani Hisham Samsudin தெரிவித்தார்.
ETS மின்சார ரயிலில் பயணிப்பவர்களும், Ekspres Intercity விரைவு ரயில் சேவையைப் பெறுபவர்களும் இந்த கட்டண கழிவைப் பெற முடியும். குறைந்தபட்சம் நால்வர் பயணிக்க ஒரே நேரத்தில் டிக்கெட்டுகள் வாங்கப்படும்போது , சிறப்பு குறியீட்டு சொல்லை புகுத்தி இந்த கழிவை பயணிகள் பெற முடியும்.