
எவர்டனின் நிர்வாகி பொறுப்பிலிருந்து Frank Lampard இடை நீக்கம் செய்யப்பட்டார்.
அந்த பிரச்சனைக்குரிய பிரிமியர் லீக் கிளப்பின் நிர்வாகியாக பொறுப்பேற்று இன்னும் ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில் Lampard பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்தாண்டு ஜனவரியில், Rafael Benitez-சுக்கு பதிலாக Everton நிர்வாகியாக Lampard பொறுப்பேற்றார்.
சனிக்கிழமை நடைபெற்ற West Ham அணியுடனான ஆட்டத்தில் Everton 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் படுதோல்வி கண்டது.
கடந்த 12 ஆட்டங்களில், Everton பதிவுச் செய்த ஒன்பதாவது தோல்வி அதுவாகும்.
அவ்வாட்டத்திற்கு பின்னர் 44 வயது Lampard நிர்வாகி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை, Everton உறுதிப்படுத்தியது.