
மலாக்கா , ஜூன் 9 – மோட்டார் சைக்கிள்களை திருடுவது மற்றும் வழிப்பறி
கொள்ளையில் ஈடுபட்டு வந்த Faiz கும்பல் முறியடிக்கப்பட்டதோடு அதன் ஆறு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். மலாக்கா தெங்கா வட்டாரத்தில் மோட்டா சைக்கிள்களை திருடிவந்த 13 வயது நபர் முதல் 40 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழிகள் அனைவரும் Tangga Batu, Paya Rumput, Taman Paya Rumput Indah, Rembia ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு சோதனை நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டடதாக Melaka Tengah மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Christopher Patit தெரிவித்தார். திருடப்பட்ட மோட்டார் கைக்கிள்களின் அமைப்பை இக்கும்பல் மாற்றிய பின் அதனை விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டதாகவும் கடந்த சில மாதங்களாக இக்கும்பல் செயல்பட்டுள்ளனர் என தெரியவந்ததாக அவர் கூறினார்.