Latestமலேசியா

FF வாகன எண் பட்டைகள் RM 34 மில்லியன் வருமானத்தை தேடித்தந்துள்ளது

கோலாலம்பூர், மே 22 – FF என்று தொடங்கும் வாகன எண் பட்டைகள்
34 மில்லியன் ரிங்கிட்டிற்கும் மேலான ஏலத்திற்கு விற்கப்பட்டிருப்பது வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது. 2019ஆம் ஆண்டு JPJ Bid ஏலமுறை பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது முதல் கூடுதலான வருமானம் அந்த எண் பட்டைகள் மூலம் கிடைக்கப் பெற்றதாக போக்குவரத்து அமைச்சர் Anthony Loke தெரிவித்தார்.
கடந்த மே மாதம் 14 ஆம் தேதி முதல் 19 ம் தேதிவரை 8,348 பேர் FF சீரியல் வாகன எண் பதிவுகளை வாங்கியுள்ளனர். FF8 என்ற எண் பட்டை RM 950.000 ரிங்கிட் வரை ஏலம் போனது. FF9 எண் பட்டை இரண்டாவதாக அதிக அளவில் 911, 999 என்ற ரிங்கிட்டிற்கு ஏலம் போனது. FF3 மற்றும் FF 2 எண் பட்டைகள் முறையே 639,000 ரிங்கிட் மற்றும் 638,000 ரிங்கிட் டிற்கு ஏலம் போனது. அந்த எண் பட்டைகளை வாங்குவதற்கு 34,032 பேர் முன்வந்தனர் என இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Anthony Loke தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!