
அனைத்து வயதினரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்றாக திகழும் French Fries பொரித்த உருளைக்கிழங்கு, ஆரோக்கியமான உணவு வகையாகவே கருதப்பட்டு வருகிறது.
எனினும், மனநலத்தில் அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது உங்களுக்கு தெரியுமா?
பொரித்த உணவு வகைகள் குறிப்பாக பொரித்த உருளைக்கிழங்கை அதிகம் உட்கொள்வதால், மனச்சோர்வு, பதற்றம் ஆகியவற்றால் ஆட்கொள்ளப்படலாம் என, சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
பொரித்த உணவை உட்கொள்ளும் ஒருவர், அதனை உட்கொள்ளாதவருடன் ஒப்பிடுகையில், பதற்றம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ள 12 விழுக்காடு கூடுதல் வாய்ப்புள்ளது. அதே சமயம், எளிதாக மனச்சோர்வு அடைய ஏழு விடுக்காடு வரையில் அதிக வாய்ப்பு உள்ளதை, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி இதழில் வெளியிடப்பட்டுள்ள அந்த ஆய்வின் முடிவு, பொரித்த உணவு வகைகளை விரும்பி உண்ணும் இளம் தலைமுறையின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது.