நியு யோர்க், பிப் 22 – பிடித்த உணவுக்காக ஒருவர் அதிகம் மெனக்கெடக் கூடும். அதற்காக அந்த உணவின் வாசத்தைப் போலவே நீங்களும் மணம் வீச விரும்புவீர்களா ?
அப்படியென்றால், பலரது பிடித்தமான உணவாக விளங்கும் French Fries – உருளைக்கிழங்கு பொரியல் மணம் கொண்ட வாசனைத் திரவியத்தை வாங்கி, பயன்படுத்த விரும்புகிறீர்களா ?
அமெரிக்காவைச் சேர்ந்த Idaho உருளைக்கிழங்கு ஆணையம் அவ்வாறான வாசனைத் திரவியத்தை தயாரித்திருக்கிறது. Frites by Idaho என பெயரிடப்பட்டிருக்கும் அந்த வாசனைத் திரவியம், லிமிடட் எடிஷென் (limited edition) எனும் ரீதியில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலே தயாரிக்கப்பட்டிருக்கிறது.