Latestஇந்தியா

G20 மாநாடு ; ‘கட்-அவுட்கள்’, ‘மிமிக்ரி’ வாயிலாக குரங்குகளை விரட்ட புதுடெல்லி முயற்சி

புதுடெல்லி, ஆகஸ்ட்டு 31 – G20 உச்சநிலை மாநாடு நடைபெறும் இடங்களில் இருந்து, குரங்குகளை அச்சுறுத்தி விரட்டியடிக்க, அதிகாரிகள் பல்வேறு யுக்திகளை வகுத்துள்ளனர்.

அதில் குறிப்பாக, சிறிய குரங்குகளை விரட்ட, ஆள் உயரத்திற்கு பெரிய உருவ படங்கள் அல்லது கட்-அவுட்களை வைப்பதும் அடங்கும்.

G20 உச்சநிலை மாநாடு நடைபெறும் பகுதிகளில், ஆங்காங்கே அந்த ஆள் உயர உருவப் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அதே சமயம், குரங்குகளை போல ஒலி எழுப்பி அச்சுறுத்தலை ஏற்படுத்த, “மிமிகிரி” பயிற்சி பெற்றவர்களை பணியில் அமர்த்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுடெல்லியில், குரங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. எனவே, உச்சநிலை மாநாட்டின் போது, அவை இடையூரை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதிச் செய்ய அந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

செப்டம்பர் ஒன்பதாம், பத்தாம் தேதிகளில், G20 உச்சநிலை மாநாட்டை இந்தியா ஏற்று நடத்தவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!