Latestமலேசியா

Geng TR கும்பல் தொடர்பில் 18 பேர் SOSMA சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பு; எதிர்த்து நீதிமன்றம் செல்லும் குடும்பத்தார்

கோலாலம்பூர், நவம்பர் -17 – Geng TR கும்பலைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி SOSMA எனப்படும் பாதுகாப்புக் குற்றங்களுக்கான சிறப்புச் சட்டத்தின் கீழ் 18 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

SOSMA சட்டத்தின் குறிப்பிட்ட சில விதிகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக இருப்பதை சுட்டிக் காட்டி, தனது கட்சிக்காரர்கள் சார்பில் அந்த சட்டப் போராட்டத்தை T. Harpal Singh முன்னெடுத்துள்ளார்.

SOSMA-வில் தடுத்து வைக்கப்பட்ட அந்த 18 பேரது குடும்ப உறுப்பினர்களுக்கான விளக்கமளிப்புக் கூட்டத்தில், Harpal Singh அவ்விவரங்களை வழங்கினார்.

மேற்கண்ட 18 பேரும், 5 ஆண்டுகளாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு Geng TR கும்பலுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்ற வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Geng TR கும்பலைச் சேர்ந்த 20 பேர் மே மாதமே நிதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு விட்ட நிலையில், இந்த 18 பேரை மாதக்கணக்கில் தடுத்து வைத்திருப்பது ஏன் என குடும்ப உறுப்பினர்கள் கேட்கின்றனர்.

விருந்துக்குப் போனவர்களை எல்லாம் சந்தேக அடிப்படையில் தடுத்து வைப்பது எந்த வகையில் நியாயம்?

கணவன் பிள்ளைகள் என குடும்ப வருமானத்துக்கு ஆதாரமாய் இருந்தவர்களைத் தடுத்து வைத்திருப்பதால், பெண்களும் குழந்தைகளும் கஷ்டப்படுகின்றனர்.

அதில் தனித்து வாழும் தாய்மார்களின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

தடுத்து வைக்கப்பட்டவர்களின்  வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதால், வீட்டைப் பராமரிப்பதில் பெண்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த SOSMA சட்டத்தால் தானும் சிறு வயது மகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக Parveen Kaur என்பவர் கூறினார்.

தங்களின் சட்டப் போராட்டத்திக்கு நீதிமன்றத்தில்  நியாயம் கிடைக்குமென அந்த 18 பேரின் குடும்பங்களும் பெரிதும் நம்பியுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!