
கோலாலாம்பூர், மார்ச் 14 – GLC – அரசாங்க சார்புடைய நிறுவனங்களில் செய்யப்படும் அரசியல் நியமனங்களை, ஒற்றுமை அரசாங்கத்தின் செயலவை தணிக்கை செய்யுமென , துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
GLC நிறுவனங்களில் எந்தவொரு அரசியல் நியமனத்தையும் செய்வதற்கு முன்பாக, அரசாங்கத்தை அமைத்திருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் , அந்த செயலவையுடன் பேச்சுவார்த்தையை நடத்தும்.
அதோடு, அரசியல் கட்சிகள் பரிந்துரைக்கும் நபர்களின் பின்னனியையும் அந்த செயலவை தீவிரமாக ஆராயும். அக்கட்சிகள் முன்னிறுத்தும் நபர்கள் மாநில அரசாங்கத்தையும் கூட்டரசு அரசாங்கத்தையும் வலுப்படுத்தக் கூடிய நபர்களாக இருப்பது உறுதி செய்யப்படுமெனவும் துணைப் பிரதமர் கூறினார்.