
நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் வயதான பெண் ஒருவரை, கிராப் ஓட்டுனர் தூக்கி காரில் அமர வைக்கும் காணொளி சமூக வளைத்தளங்களில் வைரலாகி, இணையப் பயனர்களின் மனமுவந்த பாராட்டுகளை பெற்றுவருகிறது.
@divvy19 எனும் டிக்டாக் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த காணொளி வைரலானது.
சம்பந்தப்பட்ட மூதாட்டியின் வயதான கணவர் கிராப் ஓட்டுனருக்கு நன்றி சொல்லும் காட்சியும் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக, அம்மூதாட்டியிடம் மிகவும் பரிவாகவும், கருணையுடனும் நடந்து கொள்ளும் கிராப் ஓட்டுனரை கடவுள் ஆசீர்வதிக்க வேண்டுமென பலர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
இன மத வேற்றுமை பாராமல் கிராப் ஓட்டுனர் செய்த அந்த உதவி கருணை மிகுந்த செயல் எனவும், அது போன்ற மனிதாபிமான செயல்கள் தொடரப்பட வேண்டுமெனவும், இணைய பயனர்களிடமிருந்து பாராட்டுகள் குவிகின்றன.
அந்த காணொளியை இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ள வேளை ; ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் ‘லைக்’ செய்துள்ளனர்.