
கோத்தா கினபாலு, ஜன 17 – தாமும் Gabungan Rakyat Sabah எனப்படும் GRS கட்சியைச் சேர்ந்த இதர மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் 15 – ஆவது பொதுத் தேர்தலின்போது வென்ற நாடாளுமன்ற தொகுதிகளை காலி செய்ய வேண்டியதில்லையென Papar நாடாளுமன்ற உறுப்பினர் Armizan Ali தெரிவித்திருக்கிறார். அண்மையில் பெர்சத்து கட்சியிலிருந்து விலகியதால் தங்களது நிலை குறித்து எழுந்த சர்ச்சையைச் தொடர்ந்து பெர்சத்து வின் உதவித் தலைவர் Ronald Kiandee – க்கு நாடாளுமன்ற சபாநாயகர் Johari Abdul அனுப்பிய மின் அஞ்சலின் நகல் தமக்கு கிடைத்துள்ளதாக Armizan Ali தெரிவித்தார். மொத்தத்தில் நாங்கள் நால்வரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை காலி செய்ய வேண்டியதில்லை என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.