
கோலாலம்பூர், பிப் 14 – அரசாங்கம் GST – பொருள் சேவை வரியை மீண்டும் அறிமுகம் செய்ய எண்ணம் கொண்டிருக்கவில்லை.
மாறாக, 1.5 டிரில்லியன் ரிங்கிட்டை எட்டியிருக்கும் நாட்டின் கடனைக் குறைப்பதற்கு வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்குமென பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
உதாரணத்திற்கு பணக்கார வர்க்கத்தினருக்கான உதவித் தொகை குறைக்கப்படுமென , மக்களவையில் , அமைச்சர்களின் கேள்வி பதில் நேரத்தின்போது அவர் கூறினார்.
இதற்கு முன்பு ஒட்டுமொத்தமாக மின்சார கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டிருந்த நிலையில், அந்த முடிவை கைவிட்டு T20, பெரு நிறுவனங்கள் , பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே மின்சார கட்டணத்தை அரசாங்கம் உயர்த்தியிருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.