கோலாலம்பூர், ஜூலை 16 – GST பொருள் சேவை வரியை மீண்டும் அமல்படுத்த அரசாங்கம் இன்னும் உத்தேசிக்கவில்லை.
GST பரந்த அடிப்படையிலான வாடிக்கையாளர் வரி என்பதோடு, அதனை அமல்படுத்த இது சரியான நேரம் அல்ல.
குறைந்த வருமானம் பெறுபவர்கள் வாழ்க்கை செலவின அதிகரிப்பு சவாலை எதிர்நோக்கியுள்ளதால், GST வரியை தற்போது அமல்படுத்துவது ஏற்புடையதாக இருக்காது என, இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா தெரிவித்தார்.
அதனால், தற்போதுள்ள வரிவிதிப்பு முறையை மேம்படுத்துவதோடு, வசதி குறைந்த மக்களை பாதிக்காத அல்லது பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாத வரிகளை மட்டுமே அரசாங்கம் அறிமுகப்படுத்தும் எனவும், ஹம்சா உத்தரவாதம் அளித்தார்.
மக்களவை கேள்வி பதில் நேரத்தின் போது, ஹம்சா இவ்வாறு சொன்னார்.