அலோஸ்டார், மார்ச் 5 – Gunung Keriang மலையேறும் முயற்சியில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து வெளியேறும் வழி தெரியாமல் சிக்கிக்கொண்ட மூவர் பாதுகாப்புடன் கண்டுப் பிடிக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் நேற்றிரவு மணி 11.33 அளவில் அந்த மலைப்பகுதியிலுள்ள ஒரு குகைக்குள் கண்டுப்பிடிக்கப்பட்டனர். அவர்கள் மிகவும் பலவீனமாக காணப்பட்டதாக கெடா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் அதிகாரியான Wan Mohd Hamizi தெரிவித்தார்.