
ஜொகூர், குளுவாங், குனூங் லம்பாக் பகுதியில், hiking – மலையேறும் நடவடிக்கையின் போது காணாமல் போன ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அச்சம்பவம் தொடர்பில், நேற்றிரவு மணி 8.24 வாக்கில் தங்களுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டதாக, குளுவாங் மாவட்ட தீயணைப்பு மீட்புத் துறையில் நடவடிக்கை பிரிவு கொமண்டோ சைபுல் பாட்லி காரிம் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, காணாமல் போனவர்கள் இறுதியாக WhatsApp வாயிலாக பகிர்ந்த இடத்திற்கு சென்ற தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள், இரு குழுவாக பிரிந்து அம்மூவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு மணி 11.23 வாக்கில், அவ்விடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில், அம்மூவரும் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டதை,
சைபுல் உறுதிப்படுத்தினார்.
56 வயது கணவர் Loh Yeok Keong, 53 வயது மனைவி Lok Siew Koon, மற்றும் அவர்களின் 12 வயது உறவுக்கார சிறுவன் ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.