Latestமலேசியா

Gunung Panti-யில் காணாமல்போன 3 மலையேறிகள்; பாதுகாப்புடன் உள்ளனர்

கோத்தா திங்கி, செப் 2 – கோத்தா திங்கியில் Gunung Panti மலையை ஏறும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது காணாமல்போனதாக அறிவிக்கப்பட்ட உள்நாட்டைச் சேர்ந்த மூன்று மலையேறிகள் பாதுகாப்புடன் உள்ளனர். காணாமல் போன இடத்திலிருந்து 300 மீட்டருக்கு அப்பால் நேற்றிரவு 10 மணியளவில் அவர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக ஜோகூரிலுள்ள மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது.
அவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதோடு மலைக்கு கீழே உள்ள இரண்டாவது பரிசோதனை மையத்திற்கு கொண்டுவரப்பட்டனர். இதற்கு முன்னதாக நேற்று காலையில் 7 மணியளவில் மலையேறச் சென்ற இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோரைக் கொண்ட மூன்று மலையேறிகள் திரும்பிவரும் வேளையில் பாதை தெரியாமல் காணாமல் போனதாக கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!