
கோலாலம்பூர், ஆக 31 – நாடு முழுவதிலும் உள்ள தேசியப் பள்ளிகளில்
Imam Al -Nawawi யின் 40 Hadith பாடத் தொகுதியின் அமலாக்கம் முஸ்லீம் மாணவர்களுக்கு மட்டுமே என்பதற்கான எழுத்துப்பூர்வமான உத்தரவாத உறுதியளிக்கும் சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட வேண்டும் என பல்வேறு அரசு சார்பற்ற இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த விவகாரத்தில் அரசாங்கம் உத்தரவாதம் வழங்க வேண்டும் என இதற்கு முன்னதாக கல்வி அமைச்சு ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்ட Abim எனப்படும் மலேசிய இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் தலைவர் Faisal Abdul Aziz கேட்டுக்கொண்டார். சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று எழுப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றுவதில் எந்தவொரு பிரச்னையும் இல்லையென்பதையும் கல்வி அமைச்சு தெரிவித்ததாக அவர் கூறினார்.
எனினும் அந்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்ட அரசு சார்பற்ற இயங்களின் அடையாளத்தை Faisal வெளியிடவில்லை. கல்வி அமைச்சர் Fadhlina Sidek தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் Abim இயக்கத்துடன் , சீன கல்வி அமைப்பான Dong Zong , Aliran , Pertubuhan Ikram Malaysia மற்றும் முஸ்லீம் அல்லாத சமய இயக்கங்கள் உட்ப 16 அரசு சார்பற்ற இயங்கள் கலந்து கொண்டன. Imam al – Nawawi யின் 40 Hadith பாடத் தொகுதிகளின் அமலாக்கம் முஸ்லீம் அல்லாத மாணவர்களுக்கும் போதிக்கப்படலாம் என்ற அச்சத்தையும் கவலையும் இதற்கு முன்னர் முஸ்லீம் அல்லாத சயய இயக்கங்களின் தலைவர்கள் வெளியிட்டிருந்தனர். அந்த புதிய பாடத்திட்டம் முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டுமே போதிக்கப்படும் என கல்வி அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார்.