கோலாலம்பூர், பிப் 23 – சரவாக் யுனைடெட் ( Sarawak United) அணியின் பயிற்றுநர் இ. இளவரசன், ஹரிமாவ் மலாயா ( Harimau Malaya) தேசிய காற்பந்து அணியின் உதவி பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் குறித்த அறிவிப்பை, தேசிய காற்பந்து அணியின் புதிய தலைமை பயிற்றுநரான தென் கொரியாவைச் சேர்ந்த கிம் பன் கோன் ( Kim Pan -Gon ) செய்தார்.
நாட்டின் காற்பந்து துறை குறித்து பரந்த அனுபவத்துடன், சூப்பர் லிக், உள்நாட்டு பிரிமியர் லீக் போன்ற போட்டிகளில் களம் காணும் விளையாட்டாளர்கள் குறித்து இளவரசன் நன்கு அறிந்து வைத்துள்ளார். அதன் அடிப்படையில், உதவி பயிற்றுநர் பொறுப்புக்கு இளவரசரன் தகுதியானவராக கருதப்படுவதாக கிம் பன் கோன் குறிப்பிட்டார்.