Latestமலேசியா

HIDE பட்டியலில் இடம்பெற்றுள்ள பொது போக்குவரத்து நிலையங்கள் மூடப்படாது

புத்ராஜெயா, மே 9 – HIDE முறையின் கீழ்,  கோவிட் -19  தொற்றுகள் அதிகம் பதிவாகியிருக்கும் இடங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கும் பொது போக்குவரத்து நிலையங்களும் , முனையங்களும் தொடர்ந்து செயல்படும்.

தொற்றுகள் பதிவாகியிருக்கும் எல்.ஆர்.டி கே.எல்.சி.சி (LRT KLCC) எல்.ஆர்.டி மஸ்ஜிட் ஜாமெக் ( LRT MASJID JAMEK), கேல்.எல் சென்ட்ரல் (KL SENTRAL) ஆகிய பொது போக்குவரத்து நிலையங்கள் தொடர்ந்து செயல்படுமென, போக்குவரத்து அமைச்சு இன்று ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

எனினும், அந்த நிலையங்களில் செயல்படும் அனைத்து வியாபார தளங்களும், MKN தேசிய பாதுகாப்பு மன்றம் வெளியிட்டிருக்கும் புதிய உத்தரவின் கீழ் மூன்று நாட்களுக்கு மூடப்படும்.

அவசரத் தேவையுள்ள பொருட்களை விநியோகிக்க அல்லது முன்னிலைப் பணியாளர்கள் பயணிக்க , பொது போக்குவரத்துகள் எந்நேரமும் குறிப்பாக அவசர காலத்தில் திறந்திருப்பது அவசியமென , போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!