நியு யோர்க், பிப் 17 – அமெரிக்க நோயாளி ஒருவர், HIV எய்ட்ஸ் கிருமியிலிருந்து குணமடைந்திருக்கும் உலகின் மூன்றாவது நபராக திகழ்கிறார். மேலும் அந்த பாதிப்பிலிருந்து மீண்ட உலகின் முதல் பெண்ணாகவும் அவர் கருதப்படுகிறார்.
லுக்கேமியா ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த பெண், மாற்று அறுவை சிகிச்சையின் வாயிலாக புதிய தண்டு உயிரணுக்களைப் பெற்றார். அந்த தண்டு உயிரணுக்கள் இயல்பாகவே, HIV – க்கு எதிரான நோயெதிர்ப்பாற்றலை பெற்றிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அந்த பெண் 14 மாதங்கள் HIV கிருமியின் பாதிப்பிலிருந்து விடுபட்டுள்ளார்.