
கோலாலம்பூர் ஆக 28- நாட்டின் 66 ஆம் ஆண்டு மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு இன்று HRD Corp கட்டடத்தில் தேசிய தினக் கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றது. HRD Corp தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா சாகுல் டாவூட் தலைமையில் நடைபெற்ற மெர்டேக்கா தினக் கொண்டாட்டத்தை மனித வள அமைச்சர் வ சிவகுமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். தேசிய கீதத்துடன் தொடங்கிய மெர்டேக்கா தினக் கொண்டாட்டத்தில் பல்லின மக்களின் கலை கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடனங்கள் இடம் பெற்றன.
நாட்டின் 66 ஆம் ஆண்டு தேசிய தினத்தை மலேசியர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும்படி மனித வள அமைச்சர் சிவகுமார் தமது உரையில் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார். மலேசியர்கள் மத்தியில் சகோதரத்துவம், சமத்துவம் மற்றும் ஒற்றுமை மேலோங்கும் வகையில் மெர்டேக்கா தினக் கொண்டாட்டம் அமைந்திருப்பதாக சிவகுமார் உற்சாகத்துடன் குறிப்பிட்டார்.
HRD Corp தலைமை அதிகாரி Puan Suriyati உட்பட அனைத்து அனைத்து பணியாளர்கள் இந்த கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.