Latestமலேசியா

HRD Corp மீதான சுயேட்சை தணிக்கை அறிக்கையை மனிதவள அமைச்சு தாக்கல் செய்ய வேண்டும்; PAC கோரிக்கை

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 11 – HRD Corp – மனிதவள மேம்பாட்டு கழகம் தொடர்பில், சுயேட்சை தணிக்கையாளர் முன் வைக்கும் கண்டுபிடிப்புகளை, மனிதவள அமைச்சு தமது தரப்பிடம் தாக்கல் செய்ய வேண்டுமென, PAC – தேசிய கணக்காய்வு செயற்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் மேல் விசாரணைக்காக, மனிதவள அமைச்சும், HRD Corp கழகமும் மீண்டும் அழைக்கப்படும் போது, அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படுமென, தேசிய கணக்காய்வாளர் மாஸ் எர்மியாதி சம்சுடின் (Mas Ermieyati Samsudin) நம்பிக்கை தெரிவித்தார்.

HRD Corp தொடர்பில், சுயேட்சை தணிக்கையை மேற்கொள்ளும் கெசுமாவின் நடவடிக்கை, அரசாங்க உத்தரவாத நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க பொருத்தமான ஒரு நடவடிக்கையாக கருதப்படுகிறது.

அதோடு, எந்த உண்மையும் மறைக்கப்படாது, வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படுமென வழங்கிய வாக்குறுதியில், மனிதவள அமைச்சர் உறுதியாக உள்ளார் என்பதை அது காட்டுவதாக, மஸ்ஜிட் தானா நாடாளுமன்ற உறுப்பினருமான மாஸ் எர்மியாதி சொன்னார்.

அதனால், கெசுமாவின் அந்த செயலை இதர அமைச்சரவை உறுப்பினர்களும், முன்மாதிரியாக கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக, HRD Corp தொடர்பில், தேசிய கணக்காய்வு அறிக்கையில் முன் வைக்கப்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பில், சுயேட்சை தணிக்கை மேற்கொள்ளப்படுமென நேற்று ஸ்டீவன் சிம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!