Latestமலேசியா

HRD corp விருதளிப்பு விழாவில் ஆர் ஆசியா உட்பட 17 நிறுவனங்கள் விருது பெற்றன

கோலாலம்பூர், ஜன 18 – HRD Corp நிறுவனத்தின் விருதளிப்பு விழா நேற்றிரவு தலைநகரில் KLCC மாநாட்டு மையத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மனித வள அமைச்சர் வி.சிவகுமார், HRD Corp நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி Datuk Shahul Dawood மற்றும் மனித வள அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் HRD corp சில் அங்கம் வகிக்கும் தொழில் நிறுவனங்களின் சிறந்த செயல்பாட்டை கௌரவிக்கும் வகையில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது . 7- Eleven Malaysia Sdn Bhd, Air Asia Berhad ,Cimb Bank Berhad உட்பட 17 நிறுவனங்கள் சிறந்த மனித வள மேம்பாட்டிற்கான விருதை பெற்றன. மனித வள அமைச்சர் சிவக்குமாரிடமிருந்து அந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் விருதுகளை பெற்றுக்கொண்டனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!