
கோலாலம்பூர். நவ 20 – I -Serve முதலீட்டில் மொத்தம் 118.6 மில்லியன் ரிங்கிட் இழப்பு தொடர்பில் 115 புகார்களை போலீசார் பெற்றனர். இந்த விவகாரம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப் புலனாய்வுத்துறையின் இயக்குனர் ரம்லி முகமட் யூசுப் தெரிவித்திருக்கிறார். I -Serve முதலீட்டு திட்டத்தில் சம்பந்தப்பட்டதன் தொடர்பில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணை இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பணம், வங்கிக் கணக்கு மற்றும் நிதி ரீதியில் மேலும் அதிகமான சோதனைகள் நடத்த வேண்டியிருப்பதோடு ஆவணங்களையும் திரட்ட வேண்டியிருப்பதாக ரம்லி முகமட் யூசுப் கூறினார். கடந்த மாத இறுதியில் விசாரணைக்கு உதவும் பொருட்டு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆடவரையும் போலீசார் கைது செய்தனர்.