Latestமலேசியா

IJN-னில் இருந்து வீடு திரும்பிய துன் மகாதீர் குணமடைந்து வருகிறார்

கோலாலம்பூர், பிப் 4 – IJN தேசிய இருதய கழகத்தில் சேர்க்கப்பட்டிருந்த தாம் மெல்ல குணமடைந்து வருவதாக, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.
புதிதாக வெளியிட்டிருக்கும் 1 நிமிடம் 15 வினாடிகள் கொண்ட காணொளியில், தாம் நலம் பெற்று வர பிரார்த்தித்த அனைவருக்கும் , துன் மகாதீர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மேலும் அந்த காணொளியில், தாம் கடந்த சில தினங்களாக வீட்டிலிருந்து மேற்சிகிச்சைக்காக, மருத்துத்துவமனைக்கு சென்று வருவதாக, பலவீனமான குரலில் துன் மகாதீர் பேசியிருந்தார்.

இதனிடையே, துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்னும் IJN-னில் சிகிச்சை பெற்று வருவதாக , அந்த முன்னாள் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், துன் மகாதீர் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாகவும், அவர் இன்னும் உடற்பயிற்சி மற்றும் தொடர் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!