சோலோ, பிப் 8 – இந்தேனேசியாவில் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் மரணம் அடைந்தனர். மேலும் 12 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மத்திய ஜாவா Sukoharjo நகரிலிருந்து Yogyakarta மாநிலத்திற்கு குடும்ப தின நிகழ்வுக்கு சென்று கொண்டிருந்தபோது அந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்தது. கிட்டதட்ட 47 பேர் பயணம் செய்த அந்த பஸ்சின் பிரேக் செயல் இழந்ததால் அதன் ஓட்டுனர் பதட்டம் அடைந்ததாக கூறப்பட்டது.
Related Articles
Check Also
Close