Latestமலேசியா

Inspector Harun என ஆள்மாறாட்டம்; மோசடியில் 1.14 மில்லியன் ரிங்கிட்டை பறிகொடுத்த நிறுவன இயக்குநர்

ஜோகூர் பாரு, நவம்பர்-23, ‘Inspector Harun’ என்ற பெயரில் ஆள்மாறாட்டம் செய்தவரின் பேச்சை நம்பி, நிறுவனமொன்றின் இயக்குநர் 1 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் மோசம் போயுள்ளார்.

கைப்பேசி வாயிலாக தாம் அம்மோசடிக்கு ஆளானதாக 37 வயது பெண்ணிடமிருந்த நேற்று புகாரைப் பெற்றதை, ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் உறுதிப்படுத்தினார்.

அக்டோபர் 31-ஆம் தேதி கொரியர் நிறுவனத்திடமிருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது.

ஒரு காசோலைப் புத்தகமும் வங்கி டோக்கனும் அடங்கியப் பொட்டலம் அப்பெண்ணின் முகவரிக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

தான் அப்படி எதற்கும் விண்ணப்பிக்கவில்லை என அவர் மறுத்த போது, ‘Inspector Harun’ என்பவருக்கு அழைப்பு மாற்றப்பட்டது.

அவரோ, அப்பெண்ணின் கடன் பற்று அட்டை ஒரு மோசடியில் சிக்கியிருப்பதாகவும், பேங் நெகாராவின் விசாரணைக்காக மற்றொரு வங்கிக் கணக்கில் பணத்தை மாற்றுமாறும் கூறியுள்ளார்.

சட்ட சிக்கலாகி விடுமோ என்ற பயத்தில் கொஞ்சமும் யோசிக்காத அப்பெண், போலீஸ்காரர் எனக் கூறிக்கொண்ட நபர் கொடுத்த வங்கிக் கணக்கிற்கு 1.14 மில்லியன் ரிங்கிட்டை மாற்றியுள்ளார்.

அது போதாதென்று கூடுதலாகப் பணம் கேட்ட போதே தாம் மோசடிக்கு ஆளானதை உணர்ந்து அப்பெண் போலீசில் புகார் செய்துள்ளார்.

விசாரணை என்ற பெயரில் வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றுமாறு அதிகாரிகள் ஒரு போதும் கேட்க மாட்டார்கள் என்பதால், பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டுமென டத்தோ குமார் மீண்டும் நினைவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!