
புத்ரா ஜெயா, செப் 13 – IOI சிட்டி மாலில் இருந்து பிரிசின்ட் 15 மற்றும் பிரிசின்ட் 16க்கு செல்லும் சாலையில் எண்ணெய் ஊற்றப்பட்டதால் மோட்டார் சைக்கிளிட்டிகளில் பலர் வழுக்கி விழுந்தனர். அந்த சாலையை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக செல்லும்படி வாகன ஓட்டுனர்கள் மற்றும் மோட்டா சைக்கிளோட்டிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். பொறுப்பற்ற சில தனிப்பட்ட நபர்கள் அந்த சாலையில் எண்ணெயை ஊற்றியதாக தெரிகிறது. சாலையில் எண்ணெய் கொட்டப்பட்டதால் பல வாகனங்களும் பாதிக்கப்பட்டன அங்குள்ள சாலை ஓரத்தில் எண்ணெயுடன் தட்டு ஒன்றும் இருக்கும் காணொளியும் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது.